Poetry in
translation series
HOLES_ARE_NOT_FORMED_IN_THE_GREY_COLOURED_BLANKET_AT_ALL
At some corner
of this world,
a person began
to weave
a grey coloured
blanket
with his right
hand only.
Covering towns
and cities
quickly in one
day,
the blanket
immersed people
in a deep sleep
like
stupor.
He stashed the
Sun
who comes
holding
the lamp to
awaken
from slumber
on the slopes
of the western
hill,
entered homes
and
appropriated
all that
accumulated by people
for himself.
His faithful
dog
scoured the
heads
and sucked the
brains
of those
asleep.
Grey colour
did not appear
in the dreams
of the long
sleep.
It was all
colourful
with blue and
green,
bright red
and
eye-catching yellow.
With green
fields soaked in honey,
rivers with
springs of milk,
dance of women
and laughter of
children,
it was
happiness everywhere
In place of the
Sun
that
disappeared,
a big circular
lamp
that doesn't
singe people
and evaporate
rivers
showered light
with new
shimmer.
An ecstatic
life
untouched by
the fury of a
cyclone
or flooding
from rain.
On a later
date,
after eons
passed,
when the
confined Sun shifted
to the sea of
the East,
rose in the sky
and tried to
push rays
through the
tiny holes
in the grey
blanket,
the sight of
the people
who woke up
slowly
did not go
beyond
the blanket at
all.
After sewing
the holes
in the grey
coloured blanket
with blunt
needles,
they entered
the warm world
of sleep,
rushed to the
very same juncture
they had left
and started
dreaming again.
சாம்பல் நிறப் போர்வையில் பொத்தல்கள் ஏற்படுவதே இல்லை
-----------------------------------------------
இந்த உலகின்
ஏதோ ஒரு மூலையில்
வெறுமையின் சாம்பல் நிறப்
போர்வை ஒன்றைத்
தன் வலது கையால் மட்டும்
நெய்யத் தொடங்கினான் ஒருவன்.
சட்டென ஒரே நாளில்
ஊர்களையும்
நகரங்களையும் போர்த்தி
மக்களை ஆழ்ந்த உறக்கம்போன்ற
மயக்கம் ஒன்றில்
ஆழ்த்தியது போர்வை.
உறக்கம் விழிக்க
விளக்கேந்தி வரும்
சூரியனையும்
மேற்கு மலையின்
சரிவுகளில் பதுக்கி
வீடுகளுக்குள் புகுந்து
மக்கள் சேர்த்து வைத்ததை எல்லாம்
தன் வசப்படுத்திக் கொண்டான்.
அவனுடைய
விசுவாசம் மிக்க நாய்
உறங்குபவர்களின்
மண்டைகளைக் குடைந்து
மூளைகளை உறிஞ்சியது.
நீண்ட உறக்கத்தின்
கனவுகளில்
சாம்பல் நிறம்
தோன்றவேயில்லை.
நீலமும் பச்சையும்
பளிச்சென்ற சிவப்பும்
கண்ணைப் பறிக்கும் மஞ்சளும் என
எல்லாமே வண்ண மயம்.
தேனூறும் பச்சை வயல்களும்
பாலூறும் ஆறுகளும்
மங்கையரின் நடனமும்
குழந்தைகளின் சிரிப்பும் என
எங்கும் இன்ப மயம்.
மறைந்த சூரியனின் இடத்தில்
புதுப் பொலிவுடன்
ஒளி பொழிந்தது
மக்களைச் சுட்டெரிக்காத
ஆறுகளை ஆவியாக்காத
வட்ட வடிவப்
பெரு விளக்கொன்று.
புயலின் சீற்றமோ
மழையின் வெள்ளமோ
தீண்டாத பேரின்ப வாழ்வு.
யுகங்கள் கழிந்த
பின்னொரு நாளில்
கட்டுண்ட சூரியன்
கிழக்கின் கடலுக்கு
இடம் பெயர்ந்து, வானேறி
சாம்பல் நிறப் போர்வையின்
சின்னப்பொத்தல்களின் வழியே
கதிர்களை நுழைக்க
முயன்ற பொழுதில்
மெல்ல உறக்கம்
கலைந்த மக்களின் பார்வை
போர்வையைத் தாண்டவேயில்லை.
முனை மழுங்கிய
ஊசிகளைக் கொண்டு
சாம்பல் நிறப் போர்வையின்
பொத்தல்களைத் தைத்த பின்
உறக்கத்தின் கதகதப்பான
உலகுக்குள் நுழைந்து
விட்ட இடத்திற்கே
விரைந்து சென்று
மீண்டும் கனவுகளைக்
காணத் தொடங்கினார்கள்.