Poetry in translation series

 

Is patience still a virtue when someone never stops testing you? Would you continue to remain in silence when assaulted with verbal violence?
A balloon may be elastic but will burst if pressure is applied beyond a limit and chaos will reign instead of journeys along preset paths is the inference evident from this Tamil poem penned by Karkuzhali: 


என்னிடம் நீ பேச வரும்போது
ஒதுங்கிப் போக முடியாமல்
பதிலுக்குப் பேசத் துவங்குகிறேன்.
எனக்குக் கோபம் வந்துவிடக் கூடாதென்று
பத்துவரை எண்ண முடிவு செய்கிறேன்.
எனக்கு யாரென்றே தெரியாத மனிதர்களைக்
கடிந்து பேசுகிறாய்,
காதைத் துளைக்கும் சொற்களால் குற்றம்சாட்டுகிறாய்.
ஆயிரம்வரை எண்ணி முடித்துவிட்டேன்;
அங்கிருந்து நீயும் நகரவில்லை
நானும் நகரவில்லை.
நமக்குக் கீழேயும் மேலேயும்
முடிவற்ற நீள்வட்டப் பாதையில் சுழல்கின்றன
பூமியும் வானும்;
கூடவே, என் இரண்டு காதுகளும்.
Unable to step aside
when you come to talk to me,
I start to speak in return.
In order that I do not get angry,
I decide to count till ten.
You abuse people
who are not known to me at all.
You accuse with words
which bore through the ears.
I have finished counting
up to one thousand.
You have not shifted from there
and I have not moved either.
The earth and the sky
rotate in an endless elliptical orbit
above and below us,
alongwith my two ears.
~Sri 1241 :: 11122020 :: Noida
(Translation by Sri N Srivatsa)

Poetry in translation series

 

Not often does one indulge in a double scoops of ice cream. Definitely not in mid-winter. But, what do I do when each happen to be a winner!
Here are two brilliant short poems in Tamil strung together with a riverine thread by Karkuzhali.

#
தன்னுள்ளே நீந்திக் கொண்டிருக்கும்
மீனைப் பற்றிய
சிந்தனையே இல்லை ஆற்றுக்கு.
நீரின் ஓட்டத்தை எதிர்த்து
எழுந்து நிற்கும் மலையின்
அமிழ்ந்து கிடக்கும் அடியைத்தான்
உரசியும் அரித்தும் உருமாற்றுகிறது.
#கார்குழலி 25.12.2020
 
The river has
no thoughts at all
about the fish
swimming in it.
By scratching
and etching,
it only transforms
the submerged base
of the mountain
which stands up against
the flow of water.
~Sri 1958 :: 26122020 :: Noida
#
பிரச்சனை மறு கன்னத்தைத்
திருப்புவதில் இல்லை.
எதற்காகக் காட்டுகிறோம் என
அறியாதவர்களின் மத்தியில் இருப்பது குறித்த ஆற்றாமை.
பொழியும் மழையையும் மீனையும்
தன்னுள்ளே இருத்திக் கொள்ளும் ஆறு
சுழல் விழுங்கிய பின்னும்
பொங்கியெழுந்து ஓடுவதைப்போல
மென்றும் விழுங்கியும்
கடந்துபோகும் அன்றாட வாழ்வு.
The question is
not in turning over
of the other cheek.
It is the helplessness
about being amidst
those who don't know
why they do show.
Like the river
which keeps
the pouring rain
and the fish
within itself,
rises up and flows
even after being gobbled
by the whirlpool,
everyday life
shall pass
chewing and swallowing.
~Sri 2010 :: 26122020 :: Noida

Poetry in translation series

 

It has been raining in Delhi and NCR since Saturday morning with rolls of thunder and lightning. Many workplaces being open and functioning is forcing many people to venture out in wet weather, most of them with umbrellas in hand. That said, it can easily be seen why.
 
 
சென்ற மழைக்காலத்தில்
புதுத்துணியை நனைத்துத்
தொப்பலாக்கிய மழையைப்
பழிவாங்கவென
குத்தீட்டி முனைகளை
வானோக்கி நீட்டியபடி நகரும்
குடைக் கேடயங்கள்.
To take revenge
on the rain
that drenched
the new dress
totally wet
last rainy season,
umbrella shields move
with spear tips
extended towards the sky.
~Sri 1750 :: 04012021 :: Noida
(Translation by Sri N Srivatsa)

Poetry in translation series

 

You see but do not perceive. You hear but do not listen. You speak but do not mean. You notice all the trivia but do not note what really matters. For, you only do what you want to and not bothered about what anybody else feels.
 
 
through reproduction with prior permission from the poet alongside an English translation by moi:
சுவரில் எப்போதோ அறைந்த ஆணியின் ஓட்டை
நிலத்தில் குழிந்த சின்னஞ்சிறிய பள்ளம்
நாற்காலி கைப்பிடியில் விழுந்த நகக் கீறல்
விட்டத்தின் மூலையில் அசையும் ஒட்டடை
எதையும் கண்டுபிடித்துவிடும்
கூர்ந்த கண்கள் உனக்கு.
முகத்தில் தோன்றி மறையும் பய ரேகை
கண்களின் கீழே தேங்கும் மழைமேகத்தின் இருள்
துக்கத்தை விழுங்க
ஏறி இறங்கும் தொண்டைக் குழி
படபடவெனத் துடிக்கும் இதயம்
இவற்றை எல்லாம் பார்ப்பதுமில்லை
பார்த்தாலும் புரிவதுமில்லை உனக்கு.
The hole in the wall
made by a nail
hammered eons ago.
A tiny little concave pit
on the ground.
A fingernail scratch
on the chair's armrest.
Cobweb that sways
at a corner of the roof.
You have sharp eyes
which locate all that.
The line of fear
that would appear
on the face
and disappear.
Darkness of the raincloud
that gathers below the eye.
Adam's apple that bobs
up and down
to swallow grief.
Heart that palpitates.
Neither do you see
all these
nor do you understand
when you see.
~Sri 1745 :: 05022021 :: PNQ
(Translation by Sri N Srivatsa)

Poetry in translation series

 

A poem by Karkuzhali Sreedhar translated by Prasanna Ramaswamy.

நேசம்
 
அவள் மரங்களிடம் பேசுபவள்
அதன்மேல் வந்தமரும்
பறவைகளுடனும்தான்.
தழைக்கும் கிளைகளுக்கும்
கூட்டிலுறையும் குஞ்சுகளுக்கும்
வேலியாக இருப்பாள்.
மழையற்ற கோடைகளில்
வேர்களுக்கு நீரும்
பறவைகளுக்குத் தானியமும் இரைப்பாள்.
தாம்புக் கயிறும் கோடரியும் தாங்கிவரும்
மனிதர்களிடமிருந்து
சீற்றமிகு தெய்வத்தைப்போலக்
காவல் செய்தாள்.
பின்னொரு நாளில்
கனத்த மனமும்
தளர்ந்த தேகமும்
நீர்முட்டும் விழிகளுமென
அவளிருந்த நேரத்தில்
கனிந்த மரம் தலைசாய்த்துத்
தென்றலை வீசி
அவள்மீது பூக்களைச் சொரிந்தது.
இறக்கை முளைத்த குஞ்சுகள்
இசைத்த இன்னிசைக் கூவல்
முகாரியை மோகனமாக
மிளிரச் செய்தது.
She is the one who talks to the trees
And to the birds
that perch there too
To the spreading branches
And the baby birds
She serves as a protector fence
In the rainless Summer
She pours the nurturing water to the roots
And grains to the bird
she scatters
From those who descend upon them with
ropes and axe
She stands guard
like an angry goddess
On another day
With a heavy heart and
Weak body
With brimming eyes as she sat
The tree bent over, caressed her
with its kind breeze
Showered her with it's flowers
The winged babies
Calling with their singing
Turned the note
From the tragic to joy.

 

A poem by Karkuzhali Sreedhar
நேசம்
அவள் மரங்களிடம் பேசுபவள்
அதன்மேல் வந்தமரும்
பறவைகளுடனும்தான்.
தழைக்கும் கிளைகளுக்கும்
கூட்டிலுறையும் குஞ்சுகளுக்கும்
வேலியாக இருப்பாள்.
மழையற்ற கோடைகளில்
வேர்களுக்கு நீரும்
பறவைகளுக்குத் தானியமும் இரைப்பாள்.
தாம்புக் கயிறும் கோடரியும் தாங்கிவரும்
மனிதர்களிடமிருந்து
சீற்றமிகு தெய்வத்தைப்போலக்
காவல் செய்தாள்.
பின்னொரு நாளில்
கனத்த மனமும்
தளர்ந்த தேகமும்
நீர்முட்டும் விழிகளுமென
அவளிருந்த நேரத்தில்
கனிந்த மரம் தலைசாய்த்துத்
தென்றலை வீசி
அவள்மீது பூக்களைச் சொரிந்தது.
இறக்கை முளைத்த குஞ்சுகள்
இசைத்த இன்னிசைக் கூவல்
முகாரியை மோகனமாக
மிளிரச் செய்தது.
She is the one who talks to the trees
And to the birds
that perch there too
To the spreading branches
And the baby birds
She serves as a protector fence
In the rainless Summer
She pours the nurturing water to the roots
And grains to the bird
she scatters
From those who descend upon them with
ropes and axe
She stands guard
like an angry goddess
On another day
With a heavy heart and
Weak body
With brimming eyes as she sat
The tree bent over, caressed her
with its kind breeze
Showered her with it's flowers
The winged babies
Calling with their singing
Turned the note
From the tragic to joy.

Poetry in translation

 

சுருண்டும் கூர்ந்தும்
நீண்டும் நெளிந்தும்
நெருடி நெருடித் தள்ளுகிறது
பல்லிடுக்கில் சிக்கியதை நாக்கு.
நினைவடுக்குகளில்
ஏறியும் இறங்கியும் சறுக்கியும்
காலத்தை ஓட்டும் மனதுக்கு
அத்தனை இலாவகமில்லை ஏனோ.
.
Curling up and poking
stretching and curving
protruding and pushing
the tongue eliminates the unwanted.
Through its layered memory
climbing up and down and sliding
the mind spends its time
Somehow not so elegantly

Poetry in translation

 

You and I may sway with the swing or like a bird or butterfly, take to the wing. But for all tricks we think we know, time has plenty more to show.
Presenting a wonderful take on life in this Tamil poem written by
Karkuzhali Sreedhar
by reproducing here with her prior permission alongside an English translation by moi:
மேலேயும் கீழேயுமாக
ஆடுகிறது ஊஞ்சல்.
பிடித்த கை விடுத்து
கண்ணிமைக்கும் முன்னர்
எம்பித் தாவி
ஒற்றைக் கம்பியைப் பிடித்து
உடலை நெளித்து
வளையத்துள் நுழைந்து
பின்பக்கக் கரணமடித்து
இடறாமல் தரையில்
கால் பதித்து
கையுயர்த்திப் போகிறது
ஒய்யார நடையுடன்
வாழ்க்கை.
.
Up and down
sways the swing.
Freeing the hand which held,
jumping and leaping
before batting an eye,
catching the lone wire,
twisting the body,
entering the ring,
somersaulting backwards,
planting the feet
on the ground
without tripping,
raising a hand
with a stylish gait
goes life.
~Sri 13:21:: 16032021 :: Noida

Poetry in transation

 

சுருண்டும் கூர்ந்தும்
நீண்டும் நெளிந்தும்
நெருடி நெருடித் தள்ளுகிறது
பல்லிடுக்கில் சிக்கியதை நாக்கு.
நினைவடுக்குகளில்
ஏறியும் இறங்கியும் சறுக்கியும்
காலத்தை ஓட்டும் மனதுக்கு
அத்தனை இலாவகமில்லை ஏனோ.
.
Curling up and poking
stretching and curving
protruding and pushing
the tongue eliminates the unwanted.
Through its layered memory
climbing up and down and sliding
the mind spends its time
Somehow not so elegantly