Poetry in translation series

 

What is bliss and where does one find it? Does it follow one or does one go behind it? It is not sold or bought in shops and cannot be mined and minted, but seems to be highly inflammable as the legends have always hinted. 
 
It is evident from this poem that the map to the treasure trove will unravel itself when one falls in love. Here is a romantic poem in Tamil by Karkuzhali Sreedhar:
 
இப்படியும் அப்படியுமென
ஊசலாடும் கடிகார மனம்
நிலைக்கு வந்ததும்
காலப் பரிமாணம்
பிரபஞ்சப் பெருவெளியில்
சலனமின்றிக் கரைகிறது.
நீட்சியும் குறுகலுமில்லாத
காற்றளாவும் தருணம் ஒன்றில்
நீயும் நானுமென்ற மெய்
ஓருயிராகி ஒத்திசைந்து
நேசக்கடலில் நீந்துகிறது.
மரமொன்றின்
சிலிர்க்கும் இலைகளாகத்
துவங்கும் ஆசையின் துடிப்பு
ஆழிப் பேரலையின்
வீச்சாகச் சுழன்றடித்து
வேகம் கூட்டுகிறது.
நிற்காமல் சுழலும்
கிரகங்களுக்கு ஊடாக
நாம் கைகோர்த்து ஆடும்
தட்டா மாலையைக்
கண்சிமிட்டிப் பார்க்கும்
வால் நட்சத்திரமொன்று.
விண்ணெங்கும் சிதறி
வெளிச்சத் துகளாக மின்னும்
பரவசப் பொழுதுகளை
வெண் பஞ்சு மேகத்தில்
வைரமாகப் பொதியலாம்.
பின் அலைகளைக் கிழித்துக்
கடற்படுகையுள் அதைப்
புதைத்து வைத்து
நம் இதயங்களின் துடிப்பைப்
புவியெங்கும் கடத்தலாம்.
விண்ணில் பறந்தும்
மண்ணைக் குடைந்தும்
நேச விதைகளைத்
தூவினோம் என்று
இனி வரும் யுகமொன்றின்
தேர்ந்தெடுத்த கணத்தில்
அந்த அற்புதப் புதையல்
நம் காதலைப்
பறைசாற்றட்டும்.
When the mind
swinging this way and that
like a clock's pendulum
comes to a stop,
the dimension of time
dissolves unperturbed
in the universal space.
At a moment
when the wind speaks
neither elongated
nor shortened,
the bodies
called you and I
become one life
and swim in unison
in the sea of love.
The throb of desire
that begins like
the quivering leaves
of a tree
swirls around
like a tsunami
and accelerates.
A comet
that looks at
our whirling about
hands intertwined
amidst the planets
that revolve non-stop
may scatter all over space
and imbed the shining particles
of blissful instants
as diamonds
in white cotton clouds;
It may tear through
the waves later,
bury in the seabed
and carry our heartbeat
all through the earth.
At a chosen moment
in an ensuing epoch,
let that magnificent treasure
proclaim our love that
we sowed the seeds of affection
by flying in space
and tunnelling the earth.
 
~Sri 1445 :: 23082020 :: Noida
(Translation by Sri N Srivatsa)