Insomnia drives not just humans crazy but even makes poultry turn into night owls. Stifled minds gasp for air as the dark night turns fair. However heavy the eyelids may feel, weighed down by keeping awake the whole night, it is amazing how the poet visualizes them as a pair of roosters crowing out their greeting to the first signs of daylight.
தூக்கத்தின் அமைதியை வரவேற்க
இரவின் சாளரத்தை
திறந்து வைக்கிறேன்.
வெளிச்சத்தின் கீற்றைப் போல
எளிதாகப் பரவுவதில்லை அது.
நினைவுக் குப்பையைக்
கோழியாகக் கிளறியபடி
மீளாத பாதையொன்றில்
கைவீசி நடக்கும் மனம்,
இங்கொன்றும் அங்கொன்றுமாகக்
கொத்தித் தின்றபடி
இரவு முழுவதும் மேய்கிறது.
புழுக்களாக ஊறும்
எண்ணங்களின் நமைச்சல்
தாங்காத இமைகளோ
இரட்டைச் சேவலாகக் கூவிச்
சூரியனை முந்தி அழைக்கத்
தயாராகின்றன.
#கார்குழலி 1200 14.09.2020
To welcome
the calm of sleep,
I keep
the night's window open.
It doesn't spread easily
like a ray of light.
The mind which walks
on a path of no return
swinging arms
and raking the garbage
of memory,
pecks and eats henlike
a bit here, a bit there
and roams right
through the night.
Unable to bear
the itching
of memories
crawling like worms,
the eyelids crow
like twin roosters
get ready beforehand
to welcome the Sun.
~Sri 2040 :: 14092020 :: Noida
(Translation by Sri N Srivatsa